பாஜகவை முந்திய நோட்டா..!! தேசிய கட்சிக்கு இந்த நிலையா..!! எத்தனை வாக்கு பாருங்கள்..!! - Seithipunal
Seithipunal


மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள சோஹியோங் தொகுதிக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 10ஆம் தேதி நடைபெற்ற முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. 

கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது வேட்பாளர் லிங்டோஹ் மரணத்தைத்தொடர்ந்து அந்தத் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தற்பொழுது வரை எண்ணப்பட்ட 30,433 வாக்குகளில் ஐக்கிய ஜனநாயக கட்சியின் சேர்ந்த வேட்பாளர் 15,796 வாக்குகளுடன் எண்ணபட்ட மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேல் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரைத் தொடர்ந்து தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் 12,475 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் தொடர்கிறார். மொத்தமுள்ள 6 வேட்பாளர்களில் பாஜக வேட்பாளர் வெறும் 40 வாக்குகள் மட்டுமே பெற்று நோட்டாவை குறைவான வாக்கு பெற்று கடைசி இடத்தில் நீடித்துள்ளார். பாஜக வேட்பாளரை விட நோட்டா 225 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 votes for BJP in Sohiong constituency election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->