ரெயில் டிக்கெட்களுக்கு 46 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது - மத்திய அமைச்சர் தகவல்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் உள்ளிட்ட பல விவகாரங்களை முன் வைத்து அவையை முடக்கி வருகின்றனர். எனினும் அவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று பதிலளித்தார். அப்போது அவர், ஒரு ரெயில் டிக்கெட் 100 ரூபாய் என்றால், பயணிகளிடம் ரெயில்வே நிர்வாகம் 54 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது. 46 சதவீதம் தள்ளுபடி செய்கிறது.

இதன் மூலம் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் இந்திய ரெயில்வே ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக ரூ.56,993 கோடி மானியம் வழங்குகிறது. குஜராத்தில் உள்ள புஜ் மற்றும் அகமதாபாத் இடையே நமோ பாரத் விரைவு ரெயில் சேவை ஏற்கனவே தொடங்கியுள்ளது. அதன் சிறப்பான சேவை பயணிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

46 percent discount in every train ticket union railway minister aswin info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->