புனேவைத் தொடர்ந்து டெல்லியிலும் பயங்கரம்.. 16 வயது சிறுவன் கார் ஓட்டிச் சென்று விபத்து..5 பேர் காயம்..! - Seithipunal
Seithipunal


 தற்போது சிறுவர்கள் கார் ஓட்டி வருவது ஒரு பேஷனாக மாறியுள்ள இந்த கால சூழ்நிலையில், டெல்லி ஜகத்புரி பகுதியில் ஒரு 16 வயது சிறுவன் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அச்சிறுவனைக் கைது செய்துள்ள போலீசார் அவர் ஓட்டிச் சென்ற காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுவன் ஒரு தொழிலதிபரின் மகன் என்று தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அந்த சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் , அந்த சிறுவனும், அவரது நண்பர்களும் டெல்லி கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு கடையில் காலை உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளனர் என்றும், அப்போது அங்கிருந்த ஒரு தள்ளு வண்டி மீது கார் மோதியுள்ளது என்றும்,

இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கு அருகில் இருந்த ஒரு தூய்மைப் பணியாளரின் மீதும், மேலும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 3 பேர் மீதும் மோதியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து தொழிலதிபரான இந்த சிறுவனின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.

முன்னதாக சமீபத்தில் தான் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் ஒரு 17 வயது சிறுவன் மது போதையில் ஒரு சொகுசு காரை ஓட்டிச் சென்று மோதியதில் புனேவைச் சேர்ந்த இரண்டு ஐ. டி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 People Injured in a Car Driven By a 16 Year Old Boy in Delhi after Pune


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->