வீட்டில் திருட வந்த திருடனை கொடூரமாக தாக்கிய 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடனை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள பெல்ஹார் பகுதியில் கடந்த 1ஆம் தேதி கொள்ளையடிப்பதற்காக ஒரு வீட்டிற்குள் திருடன் புகுந்துள்ளான். இதையடுத்து திருடனை மடக்கி பிடித்த பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர்.

இதில் பொதுமக்கள் கொடூரமாக தாக்கியதில் திருடன் பலத்த காயமடைந்தான். இந்நிலையில் திருடனை அப்பகுதி மக்கள் அடிக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து பெல்ஹார் போலீசார், திருடனை கொடூரமாக தாக்கிய அப்பகுதி நபர்கள் மீதும், திருடன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் திருடனை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து திருடன் மீது திருட்டு குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 persons arrested for brutally attacking the thief in Maharashtra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->