குஜராத்தில் புதிய சண்டிபுரா வைரஸ் தொற்று - 50 பேர் பாதிப்பு; 16 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் புதிதாக சண்டிபுரா வைரஸ் தொற்று பல்வேறு மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதுகுறித்து குஜராத் சுகாதார துறை அமைச்சர் ருஷிகேஷ் பட்டேல் தெரிவித்ததாவது:- "குஜராத்தில் ஹிம்மத்பூர் பகுதியில் 14 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அவர்களில் ஏழு பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைரசின் பாதிப்புக்கு ஆளான மூன்று பேர் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். இதுவரைக்கும் இந்த வைரஸ்க்கு 50 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

16 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த வைரஸ் தொடர்பாக ஒவ்வொரு கிராமம் மற்றும் சமூகநல மையங்களுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, முதலமைச்சரும், ஆட்சியர்களும் முதன்மை மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்த பாதிப்பு குறித்து அவர் மறுஆய்வு செய்ததுடன், வைரசின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அவர் ஆய்வு மேற்கொண்டார்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

50 peoples affested and 16 peoples died for sandipura virus attack in gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->