5000 கார்களை திருடிய திருடன்....27 ஆண்டுகளுக்கு பிறகு கைது..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 27 ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை திருடிய, மிகப் பெரிய கார் திருடன் கைது செய்யப்பட்டுள்ளான். 

டெல்லியில் சாதாரண ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை தொடங்கிய அனில் சவுகான் என்பவர், கடந்த 1995ம் ஆண்டு முதல் கார்களை திருடும் கொள்ளையனாக மாறி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கார்களை அதாவது, நேபாளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட  மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளார். இந்நிலையில், டெல்லி போலீசார் நேற்று தேஷ் பந்து குப்தா சாலைப் பகுதியில் இருந்த அனில் சவுகானை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்த விசாரணையில், அனில் சவுகான் கடந்த 27 ஆண்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை திருடியது தெரியவந்துள்ளது. அதிலும் அனில் சவுகான் குறிப்பாக, மாருதி 800 கார்களை மட்டுமே குறிவைத்து திருடி வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், அனில் சவுகான், கார்களை கொள்ளையடிப்பதோடு மட்டுமல்லாமல், சில கார் டிரைவர்களையும் கொலை செய்துள்ளதாகவும், தற்போது ஆயுத கடத்தலில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அனில் சவுகான், கொள்ளையடித்த கார்களை விற்று வந்த பணத்தில், டெல்லி, மும்பை, வடகிழக்கு மாநிலங்கள் என பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனில் சவுகானுக்கு 52 வயதாகும் நிலையில், மீது 180 வழக்குகள் உள்ளது. இதற்கு முன்பும் இவர், பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். ஒருமுறை 5 ஆண்டு சிறைத்தண்டனையும் பெற்றுள்ளார். அனில் சவுகானுக்கு 3 மனைவிகள், 7 பிள்ளைகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனில் சவுகானுக்கு அசாமில் அரசு ஒப்பந்ததாரராக இருந்தார். மேலும், அங்குள்ள உள்ளூர் தலைவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரிடமிருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாக்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5000 thousand car thief stole 27 years back arested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->