ஏழு பொறியியல் கல்லூரிகளில் 5ஜி ஆய்வகம் - மத்திய அரசு அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள ஏழு பொறியியல் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 5ஜி ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, ‘’இந்த 5ஜி ஆய்வகங்கள் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு 5ஜி சூழலைப் பயன்படுத்தி திட்டங்களைச் செய்ய உதவும். 

ஏற்கெனவே பல கல்லூரிகள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு மேம்பட்ட மொபைல் தொழில்நுட்பங்கள் குறித்த விருப்ப பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

பொறியியல் கல்லூரிகளில் 5ஜி ஆய்வகங்களை உருவாக்குவது, இயக்கம், உற்பத்தி, விவசாயம், சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்பாடுகளை உருவாக்க உதவும். 

இந்த ஆய்வகம் அமைப்பதற்கான மூலதன செலவில் 80%, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு 100% செயல்பாட்டு செலவினங்களுக்கு அரசாங்கம் நிதியளிக்கும். மூலதனச் செலவில் 20% நிறுவனங்கள் செலவிட வேண்டும்’’ என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5g lab in seven engineering colleges central govt info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->