இந்தியாவின் நான்கு இடங்களில் தொடங்கும் 5ஜி சேவை..!
5g network start in india
5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவை என்று அழைக்கப்படும் 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை கடந்த 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் நான்கு நகரங்களில் நாளை முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது.
இந்தியாவில் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் நாளை முதல் 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த 4 நகரங்களில் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும்.
5ஜி சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை. ஏற்கனவே மக்கள் வைத்திருக்கும் செல்போன்களில் ஜியோ 5ஜியை இயக்க போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஜியோ நிறுவனம் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனையின் அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்று ஜியோ நிறுவனம் அந்த அறிக்கையில் அறிவித்துள்ளது.
English Summary
5g network start in india