ரயில் முன் செல்ஃபி எடுத்தால் 6 மாத சிறை தண்டனை- தெற்கு ரயில்வே அறிவிப்பு
6 months imprisonment for taking selfie in front of train Southern Railway Notification
ரயில் முன் செல்ஃபி எடுக்கும் மோகம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் பல விபத்துகளும் நிகழ்கிறது.
இளைஞர்கள், மாணவர்கள் என பலர் ரயில் முன் செல்ஃபி எடுக்க முயற்சித்து ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். இந்நிலையில் ரயில் இன்ஜின் அருகே சென்று செல்ஃபி எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் பாதையைக் கடப்பது, தண்டவாளத்தில் நடப்பது, விளையாடுவது சட்டப்படி குற்றம் என்றும் ரயில் பாதையில் அல்லது ரயில் இன்ஜின் அருகே சென்று செல்ஃபி எடுத்தால் ரூ.1,000 வரை அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சமீபத்தில் செல்ஃபி எடுத்து இரண்டு இளைஞர்கள் பலியானார்கள். இதனையடுத்து தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
English Summary
6 months imprisonment for taking selfie in front of train Southern Railway Notification