நாக்பூர்: தொழிற்சாலையில் வெடி விபத்து - 6 பேர் பலி! - Seithipunal
Seithipunal



மகாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தில் இருந்து 25 கி. மீ தொலைவில் தாம்னா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு தனியார் வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வெடி மருந்துகள், வெடி பொருட்கள் மற்றும் ரசாயன மருந்துகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இன்று மதியம் 1 மணிக்கு இந்த வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி பொருட்கள் வெடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடி விபத்தில் அப்போது தொழிற்சாலையில் பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கூறிய போலீஸ் கமிஷனர் ரவீந்திர சிங்கால், "தொழிலாளர்கள் வெடி பொருட்களை பேக் செய்து கொண்டிருந்த போது தான் இந்த வெடி விபத்து சம்பவம் நடந்துள்ளது. விரைவில் இந்த வெடி விபத்திற்கான காரணம் கண்டறியப்படும். மேலும்  இந்த வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இன்று மதியமே இழுத்து மூடப் பட்டது. மேலும் விபத்து குறித்து தொடர்ந்து முறையான விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.

இதையடுத்து இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் கேபினட் அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இந்த வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 Peoples Died in Nagpur Explosives Factory Explosion


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->