அதிகரித்து வரும் பறவை காய்ச்சல்.! கேரளாவில் 6000 பறவைகள் அழிப்பு.!
6000 birds killed due to bird flu in kerala
பறவைக்காய்ச்சல் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட குளிர்கால மாதங்களில் பறவைகளுக்கு பரவக்கூடிய தொற்றுநோய். இது பறவைகளிலிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடியது.
இந்நிலையில் இந்த ஆண்டு கேரளா மாநிலத்தில் முதன்முறையாக அக்டோபர் மாதம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சலின் தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து கேரளாவில் பல இடங்களில் பறவை காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டதால் பறவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதில் கோட்டையம் மாவட்டத்தில் வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஊராட்சிகளில் பறவைக்காய்ச்சல் பரவியதால், அங்குள்ள 6,017 பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் வாத்துகள் பறவைக் காய்ச்சல் தொற்றினால் அழிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி வெச்சூரில் 133 வாத்துகளும், 156 கோழிகளும், நெண்டூரில் 2,753 வாத்துகளும், ஆர்ப்பூக்கரையில் 2,975 வாத்துகளும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் பறவைக்காய்ச்சல் கேரளாவில் பரவி வருவதால் உறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழிகளை தீவுகளுக்கு கொண்டு செல்ல லட்சத்தீவு நிர்வாகம் தடை விதித்துள்ளது.
English Summary
6000 birds killed due to bird flu in kerala