விமான நிலையத்தில் 61 கிலோ தங்கம் சிக்கியது! 7 பேரை கைது செய்தது சுங்கத்துறை! - Seithipunal
Seithipunal


கடந்த வெள்ளிக்கிழமை மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் நடந்த சோதனையில் ரூ.32 கோடி மதிப்புள்ள 61 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் நடந்த சோதனைகள் சிக்கிய அதிகபட்ச தங்கம் இதுவே ஆகும். தான்சானியா நாட்டிலிருந்து வந்த நான்கு இந்தியர்களை மும்பை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் அணிந்திருந்த பெல்ட் மூலம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவர்கள் அணிந்திருந்த பெல்ட்டை சோதனை செய்ததில் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த 53 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தோஹாவில் இணைப்பு விமானத்தில் ஏற வந்த போது சூடானை சேர்ந்த நபர் ஒருவர் இந்த பெல்டை கொடுத்து அனுப்பியது தெரியவந்துள்ளது. இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.28.17 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று துபாயில் இருந்து வந்த பெண் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனை செய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒரு பெண்ணிற்கு உடல்நிலை முடியாததால் வீல்சேரில் அமர்ந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட சோதனையில் தங்கத்தை தூளாக்கி ஜீன்ஸ் பேண்டில் வைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ரூபாய் 3.88 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

61kg of gold was caught at Mumbai airport


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->