விபத்து!!! மத்திய பிரதேசத்தில் சரக்கு வாகனம் - லாரி மோதி 7 பேர் ஸ்பாட் அவுட்...!
7 people dead collision between cargo vehicle and a lorry in Madhya Pradesh
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை லாரியும், சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சித்தி மாவட்டத்தில் இருந்து பஹ்ரியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல, மைஹாரை நோக்கி சரக்கு வாகனத்தில் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர்.

இதில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சரக்கு வாகனமுமம், லாரியும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்துள்ளது .மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.
இதில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலத்த காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக டி.எஸ்.பி காயத்ரி திவாரி தெரிவித்துள்ளார்.
இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்து உள்ளது.விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
English Summary
7 people dead collision between cargo vehicle and a lorry in Madhya Pradesh