சாம்பியன்ஸ் டிராபி வெற்றி!கையில் ஸ்டாம்ப்களுடன் வைரல் வீடியோ !!! மைதானத்தில் நடனமாடிய விராட்- ரோகித்...
Champions Trophy win Viral video with stamps in hand Virat and Rohit dancing on the field
ICC 19 -வது சாம்பியன்ஸ் டிராபி 2025 பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி 3 -வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியைவென்றது.
மேலும், இதுவரை வேறெந்த அணியும் 3 முறை சாம்பியன்ஸ் டிராபியை வெல்லவில்லை. இந்நிலையில், இந்திய ரசிகர்கள் அணியின் வெற்றியை கொண்டாடினர்.இந்த இறுதிப் போட்டியில் வெற்றிக் கண்ட இந்திய அணியினரும் சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியை களத்தில் கொண்டாடித் தீர்த்தனர்.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி:
கையில் கோப்பையுடன் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், வீரர்கள் ஒன்றாக இணைந்து நடனம் ஆடியும் கொண்டாடினர்.அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் மைதானத்தில் ஸ்டம்ப்களை கையில் வைத்துக் கொண்டு நடனமாடினர்.
களத்தில் இரண்டுபேரும் ஸ்டம்ப்களை வைத்துக் கொண்டு தாண்டியா போன்று நடனமாடியது, மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு உற்சாகமாக இருந்தது.தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.மேலும், ரோகித் மற்றும் விராட் நடன வீடியோ சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இருவரும் தாண்டியா ஆடுவதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் அவற்றில் வாழ்த்து செய்திகளை கமெண்ட்களாக பதிவிட்டு வருகின்றனர்.
English Summary
Champions Trophy win Viral video with stamps in hand Virat and Rohit dancing on the field