வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த மார்செல்லோ மால்பிகி பிறந்ததினம் இன்று !
Today is the birth anniversary of Marcello Malpighi.
உயிரினங்களின் உடற்கூறு கட்டமைப்புகளை மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ச்சி செய்வதற்கு அடித்தளமிட்ட திரு.மார்செல்லோ மால்பிகி அவர்கள் பிறந்ததினம்!.
உயிரினங்களின் உடற்கூறு கட்டமைப்புகளை மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ச்சி செய்வதற்கு அடித்தளமிட்ட மார்செல்லோ மால்பிகி (Marcello Malpighi) 1628ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி இத்தாலியின் தலைநகர் பொலோக்னா என்ற ஊரில் பிறந்தார்.

பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டே மருத்துவமும் மற்றும் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வந்தார். சுவை அரும்புகள், மூளையின் அமைப்பு, பார்வை நரம்பு, கொழுப்பு தங்கும் இடங்கள், ரத்தத்தில் ஏற்படும் நிறமாற்றங்கள், உடற்கூறியல், உடல் இயங்கியல் குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளார்.
மைக்ரோஸ்கோப் மூலம் தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களின் உடற்கூறு கட்டமைப்புகளையும் ஆராய்ந்தார். இவர் கருவியல், தாவர உடற்கூறியல், திசு அமைப்பியல், ஒப்பீட்டு உடற்கூறியலின் முன்னோடி எனப் போற்றப்பட்டார். நுரையீரல் செல்களை சோதனை செய்து பார்த்து அங்கு சிறிய மெல்லிய சுவர் கொண்ட ரத்த நுண் குழாய்கள் இருப்பதை கண்டறிந்தார். மேலும் இவைதான் தமனிகளையும், சிரைகளையும் இணைக்கின்றன என்பதையும் ஆராய்ந்து கூறினார்.

அதன்பிறகு கண்டறியப்பட்ட பல உடல் உள்ளுறுப்புகள் மால்பிஜியன் துகள்கள், மால்பிஜியன் அடுக்கு, மால்பிஜியன் குழல்கள் என இவரது பெயரால் அடையாளம் காணப்பட்டன. அறிவியல் வரலாற்றில் முக்கியமான கண்டுபிடிப்புகளை கண்டறிந்த மார்செல்லோ மால்பிகி 66வது வயதில் 1694 நவம்பர் 30 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Today is the birth anniversary of Marcello Malpighi.