742 பேர் சரண்! 801 கைது! கடந்த 10 மாதங்களில் 194 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் - அமித் ஷா! - Seithipunal
Seithipunal


உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில், நக்சல் பாதிப்பு அதிகமுள்ள மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, சத்தீஸ்கர் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நக்சல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மற்றும் அதைப் போக்குவதற்கான மேம்படுத்தப்பட்ட முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அமித் ஷா கூறியதாவது: "சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, மராட்டியம், ஜார்கண்ட், பீகார், ஆந்திரப் பிரதேசம், மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நக்சல் தாக்குதல்களின் தாக்கம் இன்னும் உள்ளது. 

ஆனால், மோடி அரசின் திட்டங்களின் மூலம், நக்சல் பயங்கரவாதம் 72% குறைக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023ல் நக்சல் தாக்குதல்களில் உயிரிழப்பு 86% குறைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சல் பயங்கரவாதத்தை முழுமையாக வேரறுக்க, மத்திய அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், ஜனவரி மாதம் முதல் 194 நக்சல் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 801 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 742 பேர் சரணடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

742 people surrender Arrest 194 Naxals have been shot dead in last 10 months Amit Shah


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->