08 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம்;குற்றவாளிகளை தேடும் போலீசார்..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் புறநகர் பகுதியில் வசித்து வரும், 08 வயது சிறுமியை 03 பேர் கொண்ட சேர்ந்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனது பெற்றோருடன்  வரும் சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 03-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி, கடந்த 31-ந் தேதி சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டுள்ளாள். அப்போது பள்ளி வளாகத்துக்குள் புகுந்த 03 மர்ம நபர்கள், சிறுமிக்கு கேக் கொடுத்து சாப்பிட சொல்லியுள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் சிறுமியுடன் விளையாடிய அவர்கள், திடீரென கத்தியை காட்டி சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி என்ன செய்வது என்று திகைத்து நின்றுள்ளார்.அந்நிலையில், 03 மர்ம நபர்களும் சிறுமியை பள்ளி வளாகத்தில் உள்ள மறைவான இடத்துக்கு தூக்கிச்சென்று அங்கு வைத்து கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அத்துடன் இங்கு நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், சொன்னால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டி சிறுமியை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் பயந்து போன அந்த சிறுமி,  தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளாள். இந்த நிலையில் நேற்று காலையில் சிறுமிக்கு பயங்கர வயிற்று வலியும், ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது, இதை பார்த்த அவளது  சித்தி, இது குறித்து சிறுமிடம் விசாரித்துள்ளார்.

அந்நிலையில், சிறுமி தன்னை 03 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் சித்தி உடனடியாக  மண்டியா டவுனில் உள்ள மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்ட  சிறுமியை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மண்டியா மிம்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையின்  சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 Year Old Brutally Gang Raped In School premises


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->