100 மீட்டர் ஓட்டப்பந்தயம்: 49 வினாடிகளில் ஓடி சாதனை படைத்த 80 வயது மூதாட்டி.!
80 year old woman who ran the 100m race in 49 seconds in uttar pradesh
உத்தரபிரதேசத்தில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 80 வயது மூதாட்டி 49 வினாடிகளில் முடித்து சாதனை படைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேசம் மீரட்டில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் 80 வயது மூதாட்டி ஒருவர் சேலை மற்றும் ரன்னிங் டிராக் ஷூ அணிந்து போட்டியில் கலந்து கொண்டார். இதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். மேலும் சிலரும் மூதாட்டி ஓடுவார்களா அல்லது கீழே விழுவார்களா என்ற யோசனையில் இருந்தனர்.
ஆனால், ஓட்டப் பந்தய அமைப்பாளர்கள் விசில் ஆடித்தவுடன் அந்த மூதாட்டி பந்தயக் குதிரையைப் போல் தானே கைதட்டி கொண்டு வேகமாக ஓடி, 100 மீட்டர் ஓட்டத்தை வெறும் 49 வினாடிகளில் முடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதையடுத்து மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து கரகோசம் எழுப்பி கைத்தட்டி மூதாட்டியை பாராட்டியுள்ளனர்.
மேலும் 100 மீட்டர் போட்டியில் ஓடி அசத்திய அந்த 80 வயது மூதாட்டி பிரி தேவி பரலா மக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட பிறகு தனது பயிற்சியாளரைக் கட்டிப்பிடித்து கொண்டாடினர்.
English Summary
80 year old woman who ran the 100m race in 49 seconds in uttar pradesh