சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி..!!
9 Peoples Died in Sikkim Landslide
சிக்கிம் மாநிலத்தில் உள்ள மாங்கன் மாவட்டத்தில் நேற்று இடைவிடாத கனமழை பெய்தது. இதன் காரணமாக அம் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த மாங்கன் மாவட்டம் சுற்றலா தலங்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மாவட்டமாகும்.
இந்நிலையில் நேற்று ஏற்பட்ட கடும் நிலச்சரிவால், அந்த மாவட்டத்தில் முக்கிய சாலைகள் பலவும் துண்டிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக மாங்கன் மாவட்டத்தில் உள்ள டிசோங்கு, சுங்தாங் , லாச்சென் மற்றும் லாச்சுங் முதலிய நகரங்கள் பிற பகுதிகளில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த நகரங்களில் 1200 க்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இடை விடாது பெய்து வரும் இந்த கனமழையால் மாங்கன் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனால் அங்கு மின் கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 9 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. மேலும் 1200 சுற்றுலாப் பயணிகள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் என்று சிக்கிம் மாநில முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
9 Peoples Died in Sikkim Landslide