அக்னிபத் கலவரம் : வன்முறையை தூண்டியதாக பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த 9 பேர் கைது.!
9 rioters arrested for inciting violence against agnipath
உத்தரப்பிரதேசத்தில் அக்னிபத் வன்முறையை தூண்டியதாக பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார்.
இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு வயது வரம்பு 17.5 - 21 வயது வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், பணி நிறைவு பெறும் வயது 21-லிருந்து 23 ஆக உயர்த்தப்பட்டது. இதில், 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக ஆளும் உத்தரபிரதேசம், பீகார், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ராணுவ பணியில் சேர பயிற்சி பெற்று வருபவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இளைஞர்களின் போராட்டத்தின் போது பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த 9 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்துள்ளனர். பயிற்சி நிறுவனங்களை சேர்ந்தவர்கள், சமூக விரோத நடவடிக்கைகளை தூண்டிவிட்டு, போராட்டக்காரர்கள் வன்முறை செயல்களில் ஈடுபட தூண்டியுள்ளனர். போலீஸ் காவலில் உள்ள மற்ற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வழக்கு ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
9 rioters arrested for inciting violence against agnipath