30 வருடமாக நடந்த வழக்கு 2000 ரூபாய் அபராததுடன் முடிவுக்கு வந்துள்ளது - எங்கு என்று தெரியுமா?
A 30 Years Case Will Come to End with 2000 Rupees Penalty
உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு அடிதடி வழக்கு, கடந்த 30 வருடங்களாக நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சுமார் 15 நீதிபதிகளின் கைகளை கடந்து வந்த இந்த வழக்கு தற்போது வெறும் 2000 ரூபாய் அபராதத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த ருசிகர வழக்கின் பின்னணி என்ன என்று பார்ப்போம். உத்திரபிரதேசத்தில் கமாசின் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1994ம் ஆண்டு ராம்ரூப் சர்மா என்பவர் கமாசின் காவல் நிலையத்தில் தன்னை 3 பேர் தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர், 3 பேர் தன்னிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தாக்கியதாக குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து அந்த மூன்று பேர் மீதும் 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடக்க விசாரணைக்குப் பிறகு கமாசின் போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் சாட்சிகள் ஆஜராகாததால் இந்த வழக்கு நிலுவையிலேயே இருந்துள்ளது. பிறகு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 2000 ரூபாய் அபராதம் விதித்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த 30 வருடத்தில் 100க்கும் மேற்பட்ட முறை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இதுவரை 15 நீதிபதிகள் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவம் நடந்த போது வாலிபர்களாக இருந்த குற்றவாளிகள் தற்போது 50 வயதை கடந்து விட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
English Summary
A 30 Years Case Will Come to End with 2000 Rupees Penalty