சிறுமியை திருமணம் செய்ய முயற்சித்த 50 வயதான நபர்... போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதம்-பெயரை மாற்றி சிறுமியை திருமணம் செய்ய முயற்சித்த 50 வயது நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகாரோவில் ஹர்லா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வங்கியில் கடன் வாங்க சென்றபோது 50 வயது நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அந்த நபர் தனது பெயர் சஞ்சய் பெஸ்ரா என்றும், அந்த கடனை தான் தருவதாகவும் கூறி உள்ளார். 

இதையடுத்து அந்த நபரும் அந்தப் பெண்ணிற்கு கடன் கொடுத்துள்ளார். பிறகு அந்தப் பெண்ணின் வீடு இருக்கும் அடிக்கடி வர தொடங்கினார். ஆனால் அந்த நபர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வரும்போது எல்லாம் போலீஸ் சீருடையில் காரில் வந்துள்ளார். மேலும் நான் ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறியுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த பெண் அவருக்கு மரியாதை கொடுத்து, நாளடைவில் அந்த நபருக்கு தனது மிகவும் சிறிய வயது மகளை திருமணம் செய்து வைத்து ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்த நிலையில், மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்வதாக யாரோ காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த நபர் மாப்பிள்ளை கோலத்தில் பண மாலையுடன் திருமண ஊர்வலமாக சிறுமியின் வீட்டை அடைந்தபோது அங்கு போலீசார் வருவதை பார்த்து அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதுகுறித்து விசாரணையில் அந்த நபர் தனது மதம் மற்றும் பெயரை மறைத்து சிறுமையை திருமணம் செய்து கொள்ள வந்ததும் ஏற்கனவே ஒரு வழக்கில் சிறை சென்றதும் தெரியவந்தது. மேலும் இதுபோன்று ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பெண்களை மோசடியில் சிக்க வைப்பது அந்த நபரின் வழக்கம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 50 year old man who tried to marry a girl ran away when he saw the police in jharkhand


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->