மன அழுத்தத்தை போக்கும் பிரியாணி இலை - வேறென்ன நோய்களைத் தீர்க்கும்?
benefits of biriyani leaf
சமையலில் கூடுதல் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் பொருள்களில் ஒன்று பிரியாணி இலை. இந்த இலையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உண்டாகிறது.
* பிரியாணி இலை புரதங்களை உடைத்து உணவை செரிக்க வைக்கும் நொதிகளை கொண்டுள்ளது.
* அஜீரணத்திற்கு மிகவும் உதவும் இந்த பிரியாணி இலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள், அலர்ஜி எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்டவை அல்சர் உள்ளிட்ட செரிமான கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
* இந்த இலையில் வைட்டமின் ஏ, பி 6 மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க உதவுகிறது.
* பிரியாணி இலை செல் சுவர்களில் கேண்டிடாவின் ஒட்டுதலை சீர்குலைக்கிறது. இதன் மூலம் கேண்டிடா நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.
* பிரியாணி இலைகளில் தேநீர் செய்து அருந்துவது மற்றும் அறைத்த பிரியாணி இலையில் காப்ஸ்யூல்களை எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவை குறைக்கிறது.
* பிரியாணி இலைகள் காயங்களை குணப்படுத்த உதவுகிறது.
* பிரியாணி இலைகள் குறைவான கவலை மனச்சோறு மற்றும் மன அழுத்தத்தை காட்டுகிறது என்று ஆய்வு ஒன்றில் வெளிவந்துள்ளது.
English Summary
benefits of biriyani leaf