தொடர் விடுமுறை வரும் வெள்ளி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கும் போக்குவரத்துக் கழகம்! - Seithipunal
Seithipunal


முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாள் என தொடர் விடுமுறை வருவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/09/2024, (வெள்ளிக் கிழமை) மற்றும் 14/09/2024 (சனிக் கிழமை) ஆகிய நாள்களில் 955 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13/09/2024 (வெள்ளிக் கிழமை) மற்றும்14/09/2024 (சனிக்கிழமை) அன்று 190 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 13/09/2024 (வெள்ளிக்கிழமை) மற்றும் 14/09/2024 (சனிக்கிழமை) அன்று 20 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு முதல் செவ்வாய் வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special bus for miladi nabi Holydays


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->