விஜய் கட்சி 6 மாதம் கூட தாங்காது - அமைச்சர் அன்பரசன் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் கட்சியின் முதலாவது மாநாடு வரும் 23-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு பேசியதாவது:- "இன்று நடிகர்கள் எல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டனர். ஏற்கனவே வந்த நடிகர் நிலைமை எல்லாம் என்ன என்று அனைவரும் பார்த்துவிட்டோம். 

அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது. எப்போதும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுகதான். விஜய் நடித்த படமே இரண்டு நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அதனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆறு மாதங்கள்தான் தாக்குப் பிடிக்கும். 

சினிமாவுக்கு வருகிற கூட்டத்தை பார்த்து நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். 6 மாதத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்ற சினிமா பெட்டியை உள்ளே வைத்துவிடலாம்" என்றுத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister t m anbarasan speech about vijay tvk party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->