பஞ்சாப்பில் பயங்கரம்; ஐ-போன் 11-க்காக நண்பனை கொலை செய்த சிறுவன்..! - Seithipunal
Seithipunal


பஞ்சாபில் ஐபோன் 11-க்காக, 17 வயது சிறுவன் நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சிறுவன் நவ்ஜோத் சிங். மார்ச் 24 அன்று அவருக்கு பிறந்தநாள். அதற்கு அடுத்த நாள் மார்ச் 25 அன்று தனது நண்பர்களுடன் ஹரித்வார் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.

ஆனால் சிறிது நேரம் கழித்து தான் ஹரித்வார் செல்லவில்லை என்றும், மீண்டும் வீட்டுக்கு திரும்புவதாகவும் பெற்றோரிடம் போன் செய்து கூறியுள்ளார்.  ஆனால், நவ்ஜோத் சிங் வீடு திரும்பவில்லை. அந்நிலையில், அதே கண்டெடுத்தனர். குறித்த  சட்டத்தின் உடம்பில் வயிற்றில் இருந்து இரண்டு துண்டுகளாக கிழிக்கப்பட்டு, மார்பில் பல வெட்டுக் காயங்கள் இருந்தன. உடலை அடையாளம் காண முடியவில்லை.

அடையாளம் தெரியாத உடலை அடையாளம் காண ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதற்கிடையே மார்ச் 30 அன்று, ஹர்ஜிந்தர் சிங் தனது மகனைத் காணவில்லை என போலீசிடம் சென்றுள்ளார். அதன்பின் அந்த உடல் நவ்ஜோத் சிங் உடையது தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ந்து தகவல் கிடைத்துள்ளது. அதாவது, நவ்ஜோத் நண்பர் அமன்ஜோத் கொலை செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். நவ்ஜோத்திடம் இருந்த ஐபோன்-11 -ஐ பெறுக்கொள்வதற்காக  கொலை செய்துள்ளார். 

அத்துடன், நவ்ஜோத்தை கொலை செய்து மற்றொரு நண்பன் உதவியுடன் உடலை ரெயில் பாதையில் போட்டுள்ளனர். மேலும், நவ்ஜோத்தின் மொபைலை அமன்ஜோத்திடமிருந்து போலீசார் மீட்டுள்ளதோடு,  அமன்ஜோத்தை  கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A boy killed his friend for an iPhone 11 in Punjab


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->