உ.பி-யில் அதிர்ச்சி; ஐ பிஎல் பார்த்துக்கொண்டிருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுவன்..!
A boy shot and killed a young man watching IPL in UP
உத்தர பிரதேசத்தில் ஐ.பி.எல் போட்டியை டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்த போது 13 வயது சிறுவன், 18 வயது இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி மீரட்டில் கஜூரி என்ற கிராமத்தில் 07-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் தமது பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளான். அப்போது, தமது தாத்தா உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளான்.
பக்கத்துக்கு வீட்டில் 18 வயது இளைஞன் முகமது கைப் என்பவரின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், முகமது கைப் டி.வி.யில் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அந்த சிறுவன் தாம் கொண்டு சென்ற துப்பாக்கியை எடுத்து முகமது கைப் முன் நீட்டி விளையாட்டு காட்டியுள்ளான். எதிர்பாராத விதமாக அவனின் விரல் துப்பாக்கியின் விசையை அழுத்திவிட, துப்பாக்கியில் இருந்து குண்டு முகமது கைப் மீது பாய்ந்துள்ளது.
இதனால், முகமது கைப் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனை தொடர்ந்து, தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றனர். முதல் கட்ட விசாரணையில் தவறுதலாக துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே அனைத்தும் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
A boy shot and killed a young man watching IPL in UP