டெல்லி : தாய் இறந்த துக்கத்தில் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


தனது தாய் இறந்த துக்கத்தில் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த மேகா காயல் என்ற பெண் மருத்துவர் லண்டனில் உள்ள மில்டன் கிளைம்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அவரது தாயார் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

தாயாரின் இறுதி சடங்கிற்காக டெல்லி வந்த மேகா மன உளைச்சல் விழுந்ததாக கூறப்படுகிறது. தாயாரின் இழப்பு தாங்காமல் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார். சம்பவத்தன்று அவரின் அண்ணி அவரின் அறைகதவை நீண்ட நேரமாக தட்டினார்.

ஆனால், அது திறக்கப்படாததால் மாற்று சாவி கொண்டு அறையை திறந்தார். அங்கு மேகா தொடையில் காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் இறந்த துக்கத்தில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104

044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)

022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A female doctor has committed suicide in mourning the death of her mother


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->