குடியரசு தின விழா - 10000 பேர் சிறப்பு விருந்தினராக அழைப்பு.!
ten thousand peoples invite republic day function
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா மிக பிரமாண்டமாக நடைபெறும். இந்த விழாவில் சாமானிய மக்களும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார்கள். அந்த வகையில், டெல்லி கடமைப்பாதையில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு பொதுமக்களில் பல தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, கிராமத்தை கவனிக்கும் முக்கிய நபர்கள், பேரிடர் நிவாரண பணியாளர்கள், சிறந்த கிராமங்களின் முக்கியஸ்தர்கள், வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாவலர்கள், கைவினைஞர்கள், கைத்தறி கைவினைஞர்கள், பல்வேறு திட்டங்களின் சாதனையாளர்கள், அங்கீகாரம் பெற்ற சமூகநல ஆர்வலர்கள், 'மன்கி பாத்' பங்கேற்பாளர்கள், பாரா ஒலிம்பிக் வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 31 பிரிவுகளில் மொத்தம் பத்தாயிரம் பேர் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
இவர்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்பது மட்டுமல்லாமல் தேசிய போர் நினைவிடம், பிரதமர் சங்கராலயா போன்ற இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்த குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பிற நாடுகளின் தலைவர்களும் முக்கிய விருந்தினராக பங்கேற்பார்கள்.
English Summary
ten thousand peoples invite republic day function