ஹெல்மெட் அணியவில்லை - நடந்து சென்ற வாலிபருக்கு 300 ரூபாய் அபராதம்.!
police 300 fine to man for not wear helmet in madhya pradesh
நடந்து சென்றவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று முன்னூறு ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்னா மாவட்டம் அஜய்கர் பகுதியை சேர்ந்த சுஷில் குமார் சுக்லா என்பவர் தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்காக விருந்தினர்களை அழைப்பதற்கு சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக காவல்துறை வாகனத்தில் சென்ற போலீசார் அவரை தடுத்தி நிறுத்தி, காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சிறிது நேரம் காவலில் வைத்துவிட்டு, ஹெல்மெட் அணியவில்லை என்றுக்கூறி ரூ.300 அபராதம் விதித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுஷில் குமார் சுக்லா, இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து போலீசார் அஜய்கர் துணை பிரிவு காவல் அதிகாரி ராஜீவ் சிங் பதோரியா தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
English Summary
police 300 fine to man for not wear helmet in madhya pradesh