வயநாடு சோகம் : பெண் உடற்கூராய்வு மருத்துவரின் 'அதிர' வைக்கும் அனுபவம்..!! - Seithipunal
Seithipunal



வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தான் இதுவரை தன் வாழ்நாளில் இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டதே இல்லை என்று அரசு பெண் உடற்கூறாய்வு மருத்துவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நான் உடற்கூறாய்வு செய்வதில் பழக்கப் பட்டவள் தான். ஆனால் இப்போதைய துயர சம்பவம் போல் நான் எப்போதும் கண்டதில்லை. எனது பணி அனுபவத்தில் நான் எவ்வளவோ உடல்களை பார்த்திருந்தாலும், என்னை நொறுங்கிப் போகச் செய்தது இப்போது நான் உடற்கூறாய்வு செய்த உடல்கள் தான். 

ஒரு 2 வயது குழந்தை உடலைப் பார்த்த போது கண்டிப்பாக என்னால் இதை உடற்கூறாய்வு செய்ய முடியாது என்றே நான் உறுதியாக கூறிக் கொண்டேன். அங்கிருந்து தப்பித்துப் போக கூட நினைத்தேன். ஆனால் அன்று வேறு வழியில்லை என்பதால் மொத்தம் 18 உடல்களுக்கு நான் உடற்கூறாய்வு செய்தேன். 

அங்கே எங்களுடன் ஒவ்வொரு மேஜைக்கு ஒரு தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் என்று மொத்தம் 8 மேஜைகளில் உடற்கூறாய்வு நடந்தது. அன்று ஒரே நாளில் மருத்துவர்கள் 53 உடல்களுக்கும், தடயவியல் நிபுணர்கள் 93 உடல்களுக்கும் உடற்கூறாய்வு செய்தோம். 

மருத்துவர் குழுவினர் தொடர்ந்து ஓய்வின்றி சிறு குழந்தைகள், பெண்கள் என்று மிகவும் சிதைந்து நசுங்கிய உடல்களை கூறாய்வு செய்ய அறுத்துக் கொண்டே இருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். தற்போதும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளதால், மருத்துவர்களாகிய நாங்களும் தொடர்ந்து வேலை செய்து கொண்டே உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Lady Doctors Worst Experience in Wayanad Post Mortem Ward


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->