ஐஏஎஸ் அதிகாரியாக வந்த மகள் .. சல்யூட் வைத்து வரவேற்ற போலீஸ் தந்தை.. தெலுங்கானாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal



தெலுங்கானாவில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி அதிகாரியாக தனது அலுவலகத்திற்கு வந்த தன் மகளை போலீஸ் அதிகாரியாக உள்ள தந்தை சல்யூட் வைத்து அலுவலகத்திற்குள் வரவேற்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நமக்கு கிடைக்காத வாய்ப்புகளை எல்லாம் நம் பிள்ளைகளுக்கு உருவாக்கி தர வேண்டும் என்றும், தன்னை விட உயர்ந்த இடத்திற்கு தன் பிள்ளைகளை கொண்டு வந்து விட வேண்டும் என்றும் நினைத்து அதற்காக இரவு, பகலாக பாடுபடும் பெற்றோர்கள் ஏராளம் உள்ளனர். 

அப்படி தன் பிள்ளைகள் ஒரு உயர்ந்த பொறுப்பிற்கு வரும்போது நெகிழும் பெற்றோர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அப்படி ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு தான் தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலுங்கானாவில்  காவல் கண்காணிப்பாளராகவும், போலீஸ் அகடெமியின் துணை இயக்குனராகவும் இருப்பவர் என். வெங்கடேஷ்வரலு.

சமீபத்தில் இவரது அகடெமிக்கு சில பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் செமினார் ஒன்றிற்காக வந்தபோது, அவர்களில் வெங்கடேஷ்வரலுவின் மகளான உமா பாரதியும் இருந்துள்ளார். தனது மகளை தனது அலுவலகத்திலேயே ஒரு உயர் அதிகாரியாக பார்த்ததும் வெங்கடேஷ்வரலு மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது மகளுக்கு சல்யூட் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

உமா பாரதியும் தனது தந்தை என்றாலும் தான் உயர் அதிகாரி என்பதற்காக தனது தந்தை மரியாதை செலுத்துகிறார் என்று உணர்ந்து வெங்கடேஷ்வரலுவின் மரியாதையை சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்கிறார். நெகிழ்ச்சியான இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Police Father Salute To His Daughter When She Becomes IAS Officer In Telangana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->