சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!...7 பேர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள ஜண்டியாலா நகர் அடுத்த நாகல் குரு கிராமத்தில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது.

இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில், வீட்டில் பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஏராளமான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதற்கிடையே வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் அந்த வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின.

இந்த வெடிவிபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அமிர்தர்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் வீடு அமைந்துள்ள கட்டிடத்தின் சுவர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A terrible explosion in an illegal firecracker factory 7 people were seriously injured


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->