வாய்க்குள் உயிருடன் சென்ற மீன்; தொண்டையில் சிக்கி இளைஞர் பலி..!
A young man died after a fish that went into his mouth alive got stuck in his throat
கேரளாவின் ஆலப்புழா அருகே காயங்குளம் புதுப்பள்ளியைச் சேர்ந்தவர் உன்னி என்கிற ஆதர்ஷ்ஆதர்ஷ், 24 வயது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள குளத்தில் துாண்டில் போட்டு மீன் பிடித்துள்ளார். அப்போது தூண்டிலில் கிடைத்த ஒரு மீனை வாயில் கவ்வி வைத்த படி மற்ற மீனை பிடிக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென்று மீன் துடித்து, அவரது தொண்டைக்குள் சென்றுள்ளது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடித்த ஆதர்ஷை அவரது நண்பர்கள் உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஆதர்ஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A young man died after a fish that went into his mouth alive got stuck in his throat