போலி ஆவணங்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் போலி ஆவணங்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியை சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் (26) என்பவர் அமெரிக்காவில் வாழ்வதற்காக ஆசைப்பட்டு, தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரன் அமெரிக்காவில் இறந்துவிட்டதாகவும், இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்கு அமெரிக்கா செல்ல வேண்டும் என்று கூறி விசாவிற்கு விண்ணப்பத்துள்ளார்.

மேலும் இதற்காக ஜஸ்விந்தர் சிங் போலியான ஆவணங்களை தயார் செய்துள்ளார். இதனை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள், போலி ஆவணங்களை கொண்டு விசாவுக்கு விண்ணப்பித்த ஜஸ்விந்தர் சிங்கை பிடித்து டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 

இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், போலி ஆவணங்கள் கொண்டு அமெரிக்காவிற்கு செல்ல திட்டமிட்ட ஜஸ்விந்தர் சிங்கை கைது செய்தனர். மேலும் போலி ஆவணங்கள் தயாரிக்க அமெரிக்காவிலிருந்து உதவிய நபர் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young man who applied for a visa with fake documents was arrested in Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->