கர்நாடகாவில் வங்கதேசப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை; தீவிர விசாரணையில் போலீசார்..!
A young woman was sexually assaulted and murdered in Karnataka
கர்நாடகாவில் கால்கெரே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.
அப்போது அவர் தனது கணவரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு அரை மணிநேரத்தில் வந்து விடுவேன் என கூறியிருக்கிறார். ஆனால், இரவு ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால், அவருடைய கணவர் பல இடங்களில் தேடிய நிலையில், மனைவி வந்தவ விடுவாள் என வீட்டுக்கு திரும்பி அவருக்காக காத்திருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (வெள்ளி கிழமை) காலை ஏரி பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் பெண் ஒருவரின் சடலம் கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவர், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி, முதல்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இறந்த பெண் நஜ்மா (வயது 28) என தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சடலமாக மீட்க பட்ட குறித்த பெண் வங்காளதேச நாட்டை சேர்ந்த பெண் எனவும், இந்தியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் ஊடுருவியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏனெனில் அவருக்கான ஆவண சான்றுகள் எதுவும் இல்லை எனவும், பெண்ணின் (நஜ்மா) கணவரிடம் ஆவணங்கள் உள்ளன என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
அவர்களுடைய குடும்பம் 05 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A young woman was sexually assaulted and murdered in Karnataka