திருப்பூர் பல்லடம் அருகே ஆதார் சிறப்பு முகாம்.!
Aadhaar special camp near Tiruppur Palladam
பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் இந்திய அஞ்சல் துறை,கோடங்கிபாளையம் ஊராட்சி நிர்வாகம், இணைக்கும் கரங்கள் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய ஆதார் கார்டு எடுத்தல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்து தரப்பட்டது.
இதில் கோடங்கிபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் காவி.பழனிச்சாமி, இணைக்கும் கரங்கள் அமைப்பு தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ஈஸ்வரன், அஞ்சல் துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
English Summary
Aadhaar special camp near Tiruppur Palladam