ரூ.3,300 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி கடிதம்..! - Seithipunal
Seithipunal


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு உறுதிதிட்ட நிதி ரூ.3,300 கோடியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; "தமிழ்நாட்டிற்கான ரூ.3,300 கோடி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்.'' 

மேலும், "தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 1.10 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ''2024-25-இல் 20 கோடி மனித சக்தி நாட்கள் வேலை வழங்க மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டது. மத்திய அரசு நிதி விடுவிப்பதில் தாமதம் செய்வதால், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஆகிறது. நிதி பெறப்பட்டதும் பணியாளர்களின் நிலுவை ஊதியம் வங்கிக்கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்" என்று  அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister I Periyasamy letter to the central government requesting the release of Rs 3300 crore funds


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->