மீண்டும் அதிர்ச்சி; கார் ரேஸில் விபத்துக்குள்ளான அஜித்குமார்..!
Ajith Kumar in a car race accident
நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் ரேஸில் விபத்துக்குள்ளாகியுள்ளார். ஸ்பெயினில் நடந்து வரும் ரேஸில் அஜித் பங்கேற்றுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடாமுயற்சி படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அஜித் சினிமா மற்றும் கார் ரேஸில் அசத்தி வருகிறார். அண்மையில் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் அணி 03-வது இடத்தை பிடித்தது. இந்த ரேஸின் போதும் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. அதில் அவர் காயமின்றி தப்பினார்.

இதைத் தொடர்ந்து, ஸ்பெயினின் வாலென்சியா நகரில் நடந்த ரேஸில் அஜித் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், தற்போது ரேஸில் பங்கேற்றார். இந்த ரேஸின் போது குறுக்கே வந்த ஒரு காரால், அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
இதில், அவரது கார் 03 முறை சுழன்றடித்தது. இருப்பினும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஆனால், அஜித்துக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் கார் விபத்துக்குள்ளான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதனை பார்க்கும் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.
English Summary
Ajith Kumar in a car race accident