கரூர் மாணவி விவகாரம்: அது போலி செய்தி.. கையெழுத்து போடு! பெற்றோரை மிரட்டும் காவல்துறை!
Karur child harras case TN Police
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே 10-வது படிக்கும் அரசுப்பள்ளி மாணவியை, 12-ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட சிலர், கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றதாக செய்தி ஒன்று காலை வெளியாகியது.
காவல்துறை தரப்பில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், செயினை அறுக்க நடந்த முயற்சி என்றும், மாணவி திட்டியதால் கழுத்தை அறுத்ததாகவும் கைது செய்யப்பட்ட மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல் என்பது போலி செய்தி என்று கையெழுத்திடுமாறு, காவல்துறை தங்களை கட்டாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை பரபரப்பு புகார் அளித்திருப்பது இந்த சம்பவத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை சம்பவங்களை போலீசார் திட்டமிட்டு மறைக்க முயல்வதாகவும், பாதிக்கப்பட்டவர்களையே போலீசார் மிரட்டி, குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, தமிழகத்தில் குற்ற சம்பவங்களை நடக்காதது போல் மூடி மறைக்க புதிய திட்டத்தை வகுத்துள்ளதா? என்ற கேள்வியையும் அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போது எழுப்ப தொடங்கியுள்ளனர்.
English Summary
Karur child harras case TN Police