ஆதார் அட்டை வடிவில் செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி பேனர்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம் ஷெட்பூர் நகரில் விநாயகர் சதுர்த்தி மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுவிதமாக ஆதார் அட்டை வடிவில் பேனர் வடிவமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதார் அட்டை வடிவ பேனரில், பெயர்: ஸ்ரீ கணேஷ், முகவரி :சன் ஆப் மகாதேவ், மேல்மாடி, மானசரோவர் ஏரி அருகில், கைலாஷ்-000001 என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும் விநாயகரின் பிறந்த தேதி 01/01/600 சி.இ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் பேஸ்புக் வடிவிலான விநாயகர் சதுர்த்தி பேனர் அச்சிடப்பட்ட நிலையில், அதைப் பார்த்தே ஆதார் அட்டை வடிவிலான பேனர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, பேனரை வடிவமைத்த சரவ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் பேனரில் உள்ள க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்தால் விநாயகர் புகைப்படங்கள் வருமாறு வசதி செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhar card type Ganesh chathurthi banner in jharkhand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->