இனி அரசின் சலுகைளை பெற ஆதார் கட்டாயம், யு.ஐ.டி. ஏ. ஐ அதிரடி உத்தரவு..!
Aadhar is Compulsory
இனி அரசாங்க மாநியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என யு.ஐ.டி. ஏ. ஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆதார் இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக கருதப்படுகிறது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்கள் மற்ற அரசு அடையாள அட்டைகளை வைத்து இதர சேவைகளை பெற்று வந்த நிலையில், தற்போது யு.ஐ.டி.ஏ.ஐ. சில மாற்றங்களை தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி, மத்திய அரசின் சலுகைகளைப் பெற ஆதார் கட்டாயம் எனவும் ஆதார் இல்லாத நிலையில், ஆதார் அட்டைக்கு பதிவு செய்து அந்த எண்ணைப் பயன்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற இனி ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு எண் வைத்திருக்க வேண்டும் என மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ சுற்றிக்கை அனுப்பியுள்ளது.நிரந்த ஆதார் வரும்வரை பதிவு எண், ஸ்லிப்பை வைத்து அரசின் சலுகளைகளை பெறலாம் என தெரிவித்துள்ளது