நீங்க 'ஆதார் எண்' வாங்கி 10 வருடம் ஆகிறதா? உடனே இதை செய்யுங்க - அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனி ஆதார் அடையாள எண் பெற்று, தற்போது வரை அதில் புதிய விவரங்களை சேர்க்காதவர்கள், உடனடியாக விவரங்களை சேர்க்க வேண்டும் என்று, அரசு முகமை அறிவுறுத்தியுள்ளது.

ஆதார் எண் வழங்கும் அரசு முகமை (யு.ஐ.டிஏ.ஐ.) நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, "பத்தாண்டுகளுக்கு மேலாக ஆதார் அடையாள எண் பெற்று, இதுவரை விவரங்களை இணைக்காதவர்கள், உடனடியாக விவரங்களை இணைக்க வேண்டும்.

தங்களின் அடையாள அட்டை, இருப்பிடச் சான்றிதழ்களை உரிய கட்டணம் செலுத்தி, இணைத்துக் கொள்ளும் வேண்டும்.

மை ஆதார் இணையதளம் மூலமாக இதை செய்யலாம். இல்லை எனில் அருகில் உள்ள ஆதார் மையம் மூலமாக ஆதார் எண்ணுடன் விவரங்களை இணைக்க வேண்டும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆதார் எண்ணுடன் புதிய விவரங்களை சேர்ப்பது கட்டாயம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhar Number 10 years old


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->