#சற்றுமுன்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட வேண்டும் - ஜெகன் மோகன் ரெட்டி! - Seithipunal
Seithipunal


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட வேண்டும் என்று ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் சமீபத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யலாம் என்று கூறிய கருத்து இந்தியாவில் மிகப்பெரிய பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவை சேர்ந்த பலரும் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியாது என கூறிவந்தனர். 

காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கருப்பு பெட்டி என்று கூறினார். நாடுமுழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

இந்த நிலையில், ஒய் ஆர் எஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது, மேம்பட்ட ஜனநாயக நாடுகளில் வாக்கு சட்டம் முறைகளில் தேர்தல் நடைபெறுகின்றன. எனவே நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலை நிறுத்தும் விதமாக இந்தியாவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Abandon electronic voting machines Jagan Mohan Reddy


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->