வயநாடு : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் நடிகர் மோகன் லால் நேரில் ஆய்வு..!! - Seithipunal
Seithipunal



கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப் பட்ட முண்டகை கிராமத்தில் மலையாள நடிகர் மோகன் லால் ராணுவத்தினருடன் ராணுவ உடையில் சென்று மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார். 

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 29ம் தேதி இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, 30ம் தேதி அதிகாலை அனைவரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்ணில் புதைந்தனர்.

மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மனிதர்கள் மட்டுமல்லாது நூற்றுக்கணக்கான விலங்குகள், மரங்கள் என்று அனைத்தும் மண்ணில் புதைந்துள்ளன. வயநாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கு மண்ணில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து இன்று 5ம் நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. Life Rescue Radar என்னும் கருவியின் உதவியுடன் மண்ணில் புதையுண்டு உள்ளவர்களை மீட்கும் பணியை ராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள முண்டகை கிராமத்தில் நடிகர் மோகன் லால் நேரில் சென்று ராணுவ வீரர்களின் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் மீட்பு பணிகள் குறித்த விபரங்களை ராணுவ வீரர்களிடம் கேட்டறிந்தார். அப்போது நடிகர் மோகன் லால் ராணுவ வீரர்கள் அணியும் உடையில் இருந்தார். முன்னதாக நடிகர் மோகன் லால் டெரிட்டோரியல் ஆர்மியில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Mohan Lal Visits Landslide Affected Area Mundakkai In Wayanad


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->