டெல்லியில் தமிழ் கல்லூரி அமைக்க நடிகர் சரத்குமார் நிதியுதவி.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியில் தமிழ்க்கல்விக்கழகம் சார்பில் ஏழு பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. அந்த பள்ளிக்கூடங்களில் முதல் பள்ளிக்கூடம் தொடங்கி சுமார் 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் அந்த பள்ளி கூட்டத்திற்கான நூற்றாண்டு விழாக்கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. 

டெல்லி இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளையும், பிற விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகளையும் வழங்கி அவ்விழாவில் பேசினார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது, "நானும் டெல்லி தமிழ் பள்ளியில் தான் படித்தேன். டெல்லி தமிழ்க்கழகம் சார்பில் கல்லூரியும் தொடங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, அதற்கு முதல் பங்களிப்பாக ரூ.25 லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன் தனது வாழ்க்கைப்பயணத்தின் முழு விவரத்தையும் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sarathkumar provide financial assistance to delhi tamil college


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->