நிலவு பூமியுடன் வேற லெவல் செல்ஃபி! ஆதித்யா எல் ஒன் விண்கலம் அசத்தல்!
ADITYA L1 SELFIE WITH MOON EARTH
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல் ஒன் விண்கலம், நிலவு மற்றும் பூமியுடன் சேர்ந்து ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்து அனுப்பி உள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள காணொளியில், பூமி மற்றும் அதன் அருகே மிகச் சிறிய அளவில் நிலா இருப்பதையும், அதனுடன் ஆதித்யா எல்ஒன் விண்கலம் செல்ஃபி எடுத்திருப்பதையும் பதிவிட்டுள்ளது.
மேலும் இந்த காணொளியில் பூமியின் அரைவட்டம் மிகத் தெளிவாக பதிவாகியுள்ளது. அதன் அருகே நிலவு மிகச் சிறிய அளவில் பதிவாகியுள்ளது.
ஆதித்யா எல் ஒன் விண்கலம் பூமி சுழல்வதையும் பதிவு செய்துள்ளதை இந்த காணொளி நமக்கு தெரிவிக்கிறது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஆதித்யா எல்ஒன் விண்கலத்தின் சுற்றப்பட்ட பாதையானது, இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை ஆதித்யா எல்ஒன் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில்,
பல கட்ட சுற்றுப்பாதை மாற்றி அமைப்புக்கு பின், பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்1 என்ற புள்ளியை 125 நாட்களில் அடையும் என்று ஏற்கனவே இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ADITYA L1 SELFIE WITH MOON EARTH