காஷ்மீர் || பல ஆண்டுகளுக்குப் பிறகு மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறப்பு - துணை கவர்னர் மனோஜ் சின்கா..!
after 30 years theaters open in kashmeer
காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் பதின்மூன்று தியேட்டர்கள் செயல்பட்டு வந்தது. ஆனால் பயங்கரவாதம் அந்த தியேட்டர்களுக்கு மூடுவிழா நடத்தியது. காஷ்மீரில் 1989-ம் ஆண்டு ஒரு பயங்கரவாத அமைப்பு ஒன்று சினிமாவை திரையிடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்ததால் தியேட்டர்கள் அனைத்தும் இழுத்துமூடப்பட்டன.
இந்நிலையில், கடந்த 1999-ம் ஆண்டு காஷ்மீர் அரசின் ஆதரவுடன் ஸ்ரீநகரில் மீண்டும் மூன்று தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் பயங்கரவாதிகளின் கையெறி குண்டுவீச்சில் சினிமா பார்க்க தியேட்டர் சென்ற ஒரு ரசிகர், கொல்லப்பட்டதன் காரணமாக மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், நேற்று காஷ்மீர் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீநகரின் சோனாவார் பகுதியில் முதல் தியேட்டரை துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா திறந்துவைத்தார். இந்த மல்டிபிளக்சின் மூன்று தியேட்டர்களில் மொத்தம் 520 இருக்கைகள் உள்ளன.
இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் வளாகத்தை தார் குடும்பத்தினர், ஐநாக்ஸ் குழுமத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளனர். அவ்விழாவில் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா பேசியதாவது, "இதன் மூலம் காஷ்மீரின் சாதாரண மக்களுக்கும் பொழுதுபோக்கு வசதி கிடைக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 100 இருக்கைகள் கொண்ட தியேட்டர்கள் திறக்கப்படும்.
இதுமட்டுமல்லாமல், காஷ்மீர் மாநிலத்தில் திரைப்பட நகரம் ஒன்றும் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். புதிய மல்டிபிளக்ஸ் தியேட்டரில் முதல் நாள் சிறப்பு காட்சியாக அமீர்கான், கரீனா கபூர் கான் நடித்த 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.
English Summary
after 30 years theaters open in kashmeer