அக்னிபத் திட்டம்.. ஒருபுறம் வெடிக்கும் போராட்டம்.. மறுபுறம் குவியும் விண்ணப்பங்கள்.!! - Seithipunal
Seithipunal


ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 14ஆம் தேதி அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களை சேர்க்கும் பணிகளில் முப்படைகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு பலவேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. மேலும், இளைஞர்கள் பல மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. விமான படையில் சேர முதல் நாளில் 3 ஆயிரத்து 800 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களில் 56 ஆயிரத்து 960 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக விமான படை தெரிவித்துள்ளது. மேலும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ https://careerindianairforce.cdac.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு ஆன்லைன் தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

agnipath 56960 applications in 3 day for indian air force


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->