ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் நிறுவனங்களின் செல்போன் கட்டண உயர்வு! பின்னணியில் பாஜக அரசின் சதியா? காங்கிரஸ் கண்டனம்! - Seithipunal
Seithipunal


ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் நிறுவனங்களின் செல்போன் கட்டண உயர்வுவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

செல்போன் கட்டண உயர்வு விவகாரத்தில் மோடி அரசு தனது கடமையை செய்யத் தவறிவிட்டதாகவும், இதன்மூலம் செல்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு செயல்பட்டுள்ளது தெரிகிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

 

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்  நிறுவனங்களின் முதலீடு, வருமானம், சேவை அளவு ஆகியவற்றில் மாறுபாடு உள்ளது. ஆனால், கட்டண உயர்வை மட்டும் இந்த மூன்று நிறுவனங்களும் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி, ஒரே மாதிரியாக அறிவித்துள்ளது எப்படி? என்று மத்திய அரசுக்கு ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பு உள்ளார்.

மேலும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இந்த மூன்று செல்போன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்து எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பு உள்ளார்.

இது மட்டுமல்லாமல் நம் நாட்டில் 92 சதவீத சேவை வழங்கும் இந்த மூன்று நிறுவனங்கள், தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதித்தது எப்படி என்றும் மத்திய அரசுக்கு ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் இந்த மூன்று நிறுவனங்கள் கடந்த 48 மணி நேரத்திற்குள் ஒரே மாதிரியான கட்டண உயர்வை அறிவித்தது எப்படி என்றும் மத்திய அரசுக்கு ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பி உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Airtel Vodafone JioTariff Congress Condemn


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->